Last Updated:
Spider man | கலிஃபோர்னியாவில் ‘கோல்டன் குளோப்ஸ்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகை ஜென்டையா கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கையில் வைர மோதிரம் அணிந்திருந்த நிலையில், அவருக்கும் ஹாலாண்ட்டுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான திரைப்படம் ‘ஸ்பைடர் மேன்’. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக மாறியவர்கள் டாம் ஹாலண்ட் – ஜென்டையா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் கலிஃபோர்னியாவில் ‘கோல்டன் குளோப்ஸ்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகை ஜென்டையா கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கையில் வைர மோதிரம் அணிந்திருந்த நிலையில், அவருக்கும் ஹாலாண்ட்டுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Also Read: Ajith | துபாயில் அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்து… என்ன ஆனது? – அதிர்ச்சி வீடியோ!
2021ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்துள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து புதிய ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படத்திலும், கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் ‘ஒடீசி’ படத்திலும் நடிக்க உள்ளனர்.
January 07, 2025 6:45 PM IST