இலங்கையில் பெய்த கனமழையால் சாலையில் கழுத்தளவு தேங்கி நின்ற தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்கு அருகில் சென்று நாளை சூறாவளி புயலாக தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

விளம்பரம்

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இலகையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கரைத்தீவு அருகே பள்ளி மாணவர்கள் சென்ற டிராக்டர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் 8 பேர் மாயமாகியுள்ளனர்.

பதுல்லா பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

விளம்பரம்

ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்புப்பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

.





Source link