மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது மதுரை மல்லி தான். மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனி மவுசு உள்ளது. இதற்கு காரணம் மதுரை மல்லி பூவின் மனம் மற்றும் தன்மை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தை பொருத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பொருத்தும் மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும். சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மல்லிப்பூ மதுரை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இதனை அடுத்து கார்த்திகை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி மதுரை மல்லிகை பூவின் விலை 300-ல் இருந்து 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதேபோல் முல்லை 800 ரூபாய்க்கும், பிச்சி 800 ரூபாய்க்கும், சம்பங்கி 100 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டு மல்லி 200 ரூபாய்க்கும் மற்ற பூக்களின் விலையும் கணிச்சமாக உயர்ந்துள்ளது.
இனி கார்த்திகை மாதம் முழுவதும் பூக்களின் வரத்தை பொறுத்து மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.