Last Updated:

Surya 45 |ரெட்ரோ திரைப்படத்தை முடித்த கையுடன், ஆர்.ஜே. பாலாஜியின் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

News18

சூர்யா நடித்து வரும் அவரின் 45 வது திரைப்படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என தலைப்பு வைத்திருக்கின்றனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதேபோல் திரிஷா நாயகியாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான தலைப்பை படக் குழுவினர் அறிவிக்கவில்லை. ஆனால் படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read: OTT Spot | திக் திக் நிமிடங்கள்… மரண விளையாட்டு… பதைபதைக்கும் காட்சிகள்.. எப்படியிருக்கிறது ஸ்குவிட் கேம் 2?

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம் வெற்றி அடையவில்லை. இதனால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் அவர் நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ திரைப்படத்தை முடித்த கையுடன், ஆர்.ஜே. பாலாஜியின் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அந்தப் படத்திற்கான தலைப்பு ‘பேட்டைக்காரன்’ என்பதை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினியின் ‘பேட்டை’ மற்றும் விஜயின் ‘வேட்டைக்காரன்’ டைட்டிலை மிக்ஸ் செய்தது போல ஒரு டைட்டிலை உருவாக்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link