குளிர்காலம் முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழையால், விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, சில நாட்களாக குளிர்ந்த காற்றும், பரவலாக மழையும் பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால், ஸ்வெட்டர், குல்லா மற்றும் கம்பளி வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,
ஆண்டுதோறும் வடமாநில வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, ஸ்வெட்டர்கள் விற்பனை செய்து வருவது வழக்கம் .
அதனடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள சாலையோர கடைகளில் ஸ்வெட்டர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதால் வடமாநிலத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேபாளம் பகுதியை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலையோரத்தில் தற்காலிக கடைகளை அமைத்து நேபாள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஸ்வெட்டர், குல்லாய் மற்றும் குழந்தைகளுக்கான உல்லன் ஆடைகள் விற்பனை செய்கின்றனர்.
சிறியவர்களுக்கான ஸ்வெட்டர் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும் பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெரியவர்களுக்கான ஸ்வெட்டர் 250, 450 ரூபாய் துவங்கி 750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேரடி விற்பனை செய்து வரும் இவர்களிடம் விழுப்புரம் பகுதி மக்கள் ஆர்வத்துடன் ஸ்வெட்டர் வாங்கி செல்கின்றனர்.
இதையும் வாசிக்க: பாம்பனை உலுக்கிய மேக வெடிப்பு… நொடியில் வெள்ளகாடக மாறிய ராமேஸ்வரம்…
வருடம்தோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தான் விற்பனைக்காக வருவோம் என்றும், இந்த வருடமும் வழக்கம் போல் வந்துள்ளதாகவும் வடமாநில வியாபாரி பாசங்புட்டி தெரிவித்தார். இந்த விற்பனைக்காக விழுப்புரத்தில் நான்கு மாதங்கள் வரை முகாமிட்டு ஸ்வட்டர் ,விற்பனை செய்து வருவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றார் போன்று ஸ்வெட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.. விலை குறைவாகவும் நல்ல தரத்தில் ஸ்வெட்டர்கள் இருப்பதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளதால் நல்ல லாபம் கிடைத்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.