Last Updated:
Tender Coconut: கோடைக்காலம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால் இளநீர் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வரும்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர் விற்பனை சூடுபிடிக்கும்.
வெயில் அதிகரிக்கும் சமயங்களில் பச்சை இளநீர் மற்றும் செவ்விளநீர் என இரண்டிற்கும் நல்ல டிமாண்டும் இருக்கும். இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே, தற்போது வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பச்சை இளநீர், செவ்விளநீர் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
மேலும் தற்போது சீசன் காலம் என்பதால் குமரி மாவட்டத்தில் செவ்விளநீர் விற்பனை களைகட்டி உள்ளது. ஒரு செவ்விளநீர் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்திலிருந்து தோட்டியோடு சந்திப்பு வரை ஏராளமான தற்காலிக இளநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Toda People New Year: எங்களுக்கு இன்னைக்கு தான் புத்தாண்டு… பாரம்பரிய மொற் பர்த் பண்டிகை கொண்டாடிய தோடர் மக்கள்…
இங்கு குறைந்த விலையில் இளநீர் விற்கப்பட்டு வருவதால் குமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மேலும் குமரியிலிருந்து கேரளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் உள்ள இளநீர் கடைகளில் இளநீர் வாங்கி பருகி வருகின்றனர். மேலும், குமரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Kanniyakumari,Tamil Nadu
January 06, 2025 12:24 PM IST