இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. நவம்பர் 11, 2024ஆம் ஆண்டுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் இதை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன், தாய்லாந்தின் சுற்றுலாத்துறையும் மேம்படும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Also Read:
இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?

தாய்லாந்தின் பிரபலமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைகிறது. பாங்காக்கில் உள்ள Wat Arun போன்ற புகழ்பெற்ற கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். வடக்கு தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் அமைதியான கோயில்கள் மற்றும் அழகான மலைப் பாதைகளுடன் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. பாங்காக்கிற்கு அருகிலுள்ள மிதக்கும் சந்தைகள் (Floating Markets) கால்வாய்களில் ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் கடற்கரைகள் மற்றும் தீவுகள் ஓய்வு எடுப்பதற்கான சிறந்த இடங்களை வழங்குகின்றன.

விளம்பரம்
கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க உதவும் 6 பழங்கள்.!


கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க உதவும் 6 பழங்கள்.!

மலிவு விலை, நட்புடன் பழகும் உள்ளூர்வாசிகள் மற்றும் பரந்த அளவிலான இடங்கள் ஆகியவற்றுடன், தாய்லாந்து இப்போது இந்தியப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

Also Read: 
US Election 2024 Result Live Updates

இந்த விசா இல்லாத நுழைவுத் திட்டத்தால், இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் கலாச்சாரம், உணவு மற்றும் இயற்கை அழகை மிக எளிதாக அனுபவிக்க அனுமதிக்கிறது.

.



Source link