Last Updated:

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News18

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

‘தி கோஸ்ட்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதையும் வாசிக்க: Box office | ரூ.6 கோடி பட்ஜெட்…ரூ.50 கோடி வசூல்! – ‘மாஸ்’ காட்டும் மலையாள படம்!

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘விஜய் 69’ படத்தின் டைட்டில் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதே நாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Source link