Last Updated:
Thalapathy 69 Update | விஜய் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்ததால், இந்தப் படம் அவரது திரையுலகில் கடைசி படமாக இருக்கும் என அவர் அறிவித்தார்.
விஜய் நடித்து வரும் 69-வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.450 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதையடுத்து விஜய் நடிக்கும் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். விஜய் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்ததால், இந்தப் படம் அவரது திரையுலகில் கடைசி படமாக இருக்கும் என அவர் அறிவித்தார்.
இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஷெட்யூல் ஜனவரி மாதம் தொடங்குகிறது. படம் அரசியலை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
December 31, 2024 11:16 AM IST