தொடர்ச்சியாக 3 தினங்கள் சுப முகூர்த்த நாளாக வருவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: Sathuragiri: சதுரகிரி போக பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..
தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.1000க்கும், பிச்சி ரூ.500க்கும், சம்பங்கி ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாளை (நவ.27), நவ.28, நவ.29 என தொடர்ச்சியாக 3 நாட்கள் சுபமுகூர்த்தத் தினமாக வருவதை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.700க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.320க்கும், வாடாமல்லி கிலோ ரூ.80க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.40க்கும், சம்பங்கி கிலோ ரூ.100க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.40க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.15க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.180க்கும், செவ்வந்தி கிலோ ரூ.300க்கும் விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: மிரள வைக்கும் மிக் போர் விமானம்… சாலையில் செல்வோரையும் ஷாக் ஆக்கும் காட்சி…
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “தற்போது ஐயப்பன் கோவில் மண்டலப் பூஜை சீசன் மற்றும் ஏராளமான சுபமுகூர்த்தங்கள் இருப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உள்ளூர் பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது.
பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாகப் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் அளவும் குறைவாக இருக்கிறது. இதனால் தேவைக்கேற்பப் பூக்கள் கிடைப்பதில்லை, தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.