Last Updated:

TM Krishna | “பெரியார் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டு தான் இருப்பேன். லுங்கி அணிந்தால் அனுமதியில்லை என்ற ஆடை கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும்” என இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News18

“பெரியார் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டு தான் இருப்பேன். லுங்கி அணிந்தால் அனுமதியில்லை என்ற ஆடை கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும்” என இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பெரியார் பாடலை பாடினார். தொடர்ந்து டி.எம்.கிருஷ்ணாவுக்கு பெரியார் சிலையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில், 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசுவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது. சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்ற பாடலை கலைஞர் கருணாநிதி கூறிய பிறகு முதல் பாடல் ஒலிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: அஜித் வாழ்க, விஜய் வாழ்க சரி; நீங்க எப்போ வாழப்போறீங்க? ரசிகர்களுக்கு அஜித்குமார் கேள்வி…

தொடர்ந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துவது போலவும் AI வீடியோவில் இடம்பெற்றிருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் ஆலய திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா, “அனைத்து கலைகளும் சமம். அனைத்து மக்களும் சமம். அனைவரையும் சேர்ப்பது கலைதான். பெரியார், அம்பேத்கர் பாடல்களை நான் தொடர்ந்து பாடிக்கொண்டேதான் இருப்பேன். சமத்துவத்தை பற்றி நான் பாடிக்கொண்டுதான் இருப்பேன். அது என்னுடைய முக்கியமான கடமை. இந்தியா என்பது ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு. அதில் இவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரியாரின் பங்கும் முக்கியமானது. லுங்கி அணிந்தால் அனுமதியில்லை என்ற ஆடை கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும்” என்று டி.எம்.கிருஷ்ணா கூறினார்.



Source link