வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும். ஆனால் பொருளாதார கட்டுப்பாடுகளின் காரணமாக உங்களுடைய ஆசையை தள்ளிப் போடுகிறீர்களா? அப்படி என்றால் உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த காரணத்திற்காக லோன்களை வழங்குகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த லோன்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது, இதற்கான கட்டணங்கள் என்ன, வட்டி விகிதங்கள் யாவை மற்றும் பல முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

டிராவல் லோன் என அழைக்கப்படும் இது பர்சனல் லோனின் மற்றொரு வடிவமாகும். ஆனால் இது குறைவான வட்டி விகிதங்களோடு நமக்கு கிடைக்கிறது. இந்த குறுகிய கால அளவு கொண்ட லோன்கள். மாத சம்பளம் பெறக்கூடிய நபர்கள், சுயதொழில் செய்யும் நபர்கள் போன்றவர்களுக்கு வருமான அளவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

டிராவல் லோன் பெறுவதற்கு யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள் மற்றும் இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு?:

21 முதல் 60 வயது வரையிலான மாத சம்பளம் வாங்கும் நபர்கள் இந்த லோனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த குறைந்தபட்ச வயது வரம்பு சுயதொழில் செய்யும் நபர்கள்(குறைந்தபட்சம் 2 வருடங்களுக்காகவது நீங்கள் ஒரு வேலையை பெற்றிருக்க வேண்டும்) மற்றும் தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இன்னும் ஒரு சில வங்கிகள் தொழில் செய்து வருபவர்கள் அதே தொழிலில் கடந்த 5 வருடங்கள் நீடித்திருக்க வேண்டும் என்றும் பணிபுரிந்து வருபவர்கள் மூன்று வருடங்களுக்கு தங்களுடைய துறையில் வேலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான 8 ஆரோக்கிய நன்மைகள்.!


வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான 8 ஆரோக்கிய நன்மைகள்.!

நிலையான வருமானத்தை கணக்கீடு செய்வதற்காகவே இது செய்யப்படுகிறது. டிராவல் லோன் பெறுவதற்கு ஒவ்வொரு கடன் வழங்குநரும் வெவ்வேறு குறைந்தபட்ச வருமான தொகையை நிர்ணயிக்கின்றனர். இது குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 10.5% என்று ஆரம்பித்து 25 சதவீதம் வரை செல்லலாம். எனினும் உங்களுடைய வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு கொண்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் உங்களுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

விளம்பரம்

ஒருவரால் எவ்வளவு கடன் பெற முடியும் மற்றும் திருப்பி செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் யாவை? உங்களால் 30,000 ரூபாயிலிருந்து டிராவல் லோன் பெற முடியும். அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வாங்கலாம். இதற்கான திருப்பி செலுத்தும் ஆப்ஷன் என்பது மாத தவணையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் டிராவல் லோன்களை பொருத்தவரை 1 முதல் 6 வருடங்கள் என்ற குறைவான கால அளவு கொண்டவையாக உள்ளன. அதிலும் ஒரு சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூன்று மாதங்கள் என்ற குறைந்த கால அளவை தருகின்றன.

விளம்பரம்

டிராவல் லோன் பெறுவதற்கு தேவையான டாக்குமெண்ட்கள்:

அடையாள சான்றிதழ்: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் பாஸ்போர்ட் போன்றவற்றின் நகல்.

முகவரி சான்றிதழ்: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களின் நகல்.

வருமானம்: கடந்த 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மெண்ட். சமீபத்திய 2 சேலரி ஸ்லிப் அல்லது தற்போதைய தேதியுடன் கூடிய சமீபத்திய படிவம் 16 உடன் சம்பள சான்றிதழ்.

டிராவல் லோன் வாங்கும்பொழுது ஒருவர் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்? பர்சனல் லோன்களை காட்டிலும் டிராவல் லோன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவானதாக இருந்தாலும் இதற்கான பிராசசிங் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். இது கடன் தொகையில் 2% முதல் 5.5% வரை இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த கட்டணத்திற்கு கடன் பெறுபவர்கள் 18 சதவீத ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

விளம்பரம்
பச்சை VS ஊறவைத்த நட்ஸ்: வேறுபாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்.!


பச்சை VS ஊறவைத்த நட்ஸ்: வேறுபாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்.!

கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு ஒரு சில கடன் வழங்குநர்கள் கட்டணங்களை வசூல் செய்வார்கள். இன்னும் ஒரு சில லோன்களுக்கு 12 மாதங்கள் என்ற லாக்கின் பீரியட் நிர்ணயிக்கப்படும். அப்படி இருக்க நீங்கள் ஒரு வருடம் ஆகும் வரை உங்களுடைய அக்கவுண்ட்டை நீங்கள் மூட முடியாது. அக்கவுண்ட்டை முன்கூட்டியே மூடுவதற்கான கட்டணம் நிலுவையில் உள்ள தொகையில் 5 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

.



Source link