Last Updated:

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் படத்திலும் த்ரிஷா இடம் பெற்றிருக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

News18

நடிகை த்ரிஷா குறித்து இணையத்தில் பரவும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் நடித்து வருகிறார். தற்போதைய சூழலில் மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் த்ரிஷா.

இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் சூர்யாவுடன் அவரது 45 வது படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

இதேபோன்று மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் படத்திலும் த்ரிஷா இடம் பெற்றிருக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சிறிது காலம் திரை துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வார் என்று இணையத்தில் தகவல்கள் பரவியுள்ளன. இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க – Saif Ali Khan | “அலறல் சத்தம் கேட்டு சென்றேன்… அப்போது…” – சைஃப் அலிகானின் அதிர்ச்சி வாக்குமூலம்!

முன்பு அளித்த பேட்டிகளில் தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாக த்ரிஷா கூறியிருந்தார். த்ரிஷா படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு அரசியலிலும் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து த்ரிஷா தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படாத நிலையில் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வார் என்கிற தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.



Source link