Last Updated:
Union Budget 2025 Expectations | வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட்டில், லாரி கட்டமைப்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் லாரி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி, சுங்க வரியைக் குறைக்க வேண்டும், காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்துக்குப் பிறகு, லாரி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் உள்ளன. மேலும், லாரி கட்டமைப்பிலும் நாமக்கல் முன்னிலை வகிக்கிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக லாரி தொழில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டு பிரீமியம் உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட்டில், லாரி கட்டமைப்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காப்பீட்டு பிரீமியத்தை குறைப்பதுடன் லாரிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கு லாரிகளை ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லும் வசதியை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும், காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : ரவி ( நாமக்கல்)
January 27, 2025 10:24 AM IST
Union Budget 2025 | ஜிஎஸ்டி வரி குறைப்பு, காப்பீட்டுத் தொகை விடுவிப்பு… மத்திய பட்ஜெட்டில் லாரி உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?