சிஸ்டம் மெயின்டனென்ஸ் காரணமாக, வரும் 23ஆம் தேதி HDFC வங்கியின் யுபிஐ சேவை சுமார் ஐந்து மணிநேரம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை மிகவும் ஸ்ட்ராங் ஆக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் UPI சேவைகளுக்கு திரும்பியுள்ளனர்.
Also Read:
Gold Rate: மீண்டும் ரூ.7000த்தை தாண்டிய தங்கம் விலை… இன்றைய ரேட் என்ன தெரியுமா?
ஆப் மூலம் பில் செலுத்துவது, சாப்பிட்ட உணவுக்கு பில் செலுத்துவது, கேப்-க்கு பில் செலுத்துவது, ஷாப்பிங் செய்வது, பெட்ரோல் போடுவதற்கு பில் செலுத்துவது, அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர், அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ சரிபார்த்தல் என எதுவாக இருந்தாலும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது வசதியானதாக கருதப்படுகிறது.
ஷாப்பிங் செய்வது முதல் பில் செலுத்துவது வரை அனைத்திற்கும் UPI மூலம் பணம் செலுத்துவது மிகவும் எளிதானது என்பதால் மில்லியன் கணக்கான மக்கள் UPIக்கு திரும்பியுள்ளனர். இதனால், UPI சேவை வாரத்தின் அனைத்து நாட்களும் பயன்படுத்தப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சிஸ்டம் மெயின்டனென்ஸ் காரணமாக நவம்பர் 23ஆம் தேதி எச்டிஎஃப்சி-ன் UPI சேவை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தேதியில் UPI சேவை நிறுத்தப்படும்.
Also Read:
வெளிநாட்டு வேலையை விட்டு ரூ. 3.5 லட்சத்தில் தொழில் தொடங்கி இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்..
UPI சேவைகள் கிடைக்காது
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, அதன் UPI சேவையை நவம்பர் 23ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நிறுத்தி வைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பின்வரும் சேவைகள் கிடைக்காது.
1. எச்டிஎஃப்சி வங்கியின் கரண்ட் மற்றும் சேவிங் அக்கவுண்ட், ரூபே கிரெடிட் கார்டில் நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனை சேவைகள் கிடைக்காது.
2. HDFC மொபைல் பேங்கிங் ஆப், கூகுள் பே, வாட்ஸ்ஆப், Paytm, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மொபிவிக் மற்றும் Kredit.Pe ஆகியவற்றில் நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனைகள் கிடைக்காது.
எச்டிஎஃப்சி வங்கி மூலம் பரிவர்த்தனை செய்யும் அனைத்து வணிகர்களுக்கும் வரும் 23ஆம் தேதி UPI பரிவர்த்தனைகள் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UPI லிமிட்ஸ் அதிகரிப்பு
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், செப்டம்பர் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனைகளின் லிமிட்டை அதிகரித்தது. RBI சமீபத்தில் UPI 123Pay வசதிக்கான பரிவர்த்தனை லிமிட்டை ரூ.5000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் UPI லைட் லிமிட்டையும் ரூ.5000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியது. இதற்கிடையில், பரிவர்த்தனைகளின் லிமிட்டையும் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
.