மானிட்டரி பாலிசியை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்ததை அடுத்து UPI அப்ளிகேஷனுக்கான அதிகபட்ச ட்ரான்ஸாக்ஷன் லிமிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சமீபத்திய MPC சந்திப்பில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா UPI 123 Pay-க்கான ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டையும் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கூடுதலாக UPI Lite Wallet லிமிட்டையும் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் UPI Lite-க்கான லிமிட் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

பாலிசி விகிதத்தில் பத்தாவது முறையாக எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒரு சில மத்திய வங்கிகளும் தங்களுடைய வட்டி விகிதங்களை குறைத்துள்ளனர்.

மானிட்டரி பாலிசியை அறிவித்த RBI

தற்போதைய நிதியாண்டுக்கான நான்காவது பை மந்த்லி மானிட்டரி பாலிசியை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தபோது 6.5% என்ற ரெப்போ விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதை கூறினார். இந்த வட்டி விகிதத்தை பிப்ரவரி 2023 முதலில் இருந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் வைத்து வருகிறது.

விளம்பரம்

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதன் மானிட்டரி பாலிசியை மாற்றிய பிறகு பென்ச்மார்க் BSE சென்செக்ஸ் 50 பாயிண்டுகள் அதிகரித்தது. இதற்கு முந்தைய ட்ரேடில் 30 ஷேர் BSE சென்செக்ஸ் 556.97 புள்ளிகள் அல்லது 0.68% அதிகரித்தது.

இதையும் படிக்க:
பிரிட்டன் மன்னர் சார்லஸை விட இந்த இந்தியரின் சொத்து மதிப்பு அதிகம்.. தந்தையின் சொத்து மட்டுமே ரூ.45345 கோடி.. யாருனு தெரியுமா?

30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், பவர் கிரிட் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகியவை பெரிய அளவில் லாபத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் நெஸ்லே இந்தியா, ஐடிசி, ஹுல், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளன.

விளம்பரம்

எதிர்பார்த்தபடி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதன் பாலிசி அறிவிப்பின்போது மானிட்டரி பாலிசி கமிட்டி வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உள்நாட்டு பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டில் முக்கிய கவனிப்பு செலுத்தி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று பாண்ட் பஜார் ஃபவுண்டர் சுரேஷ் தாரக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:
தனது வாழ்நாளில் இவ்வளவு நன்கொடையா..? வாயை பிளக்கவைக்கும் டாடா..!

அக்.8ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5729.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். மேலும் உள்ளூர் முதலீட்டாளர்கள் 7000.68 ரூபாய் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர் என்று எக்ஸ்சேஞ்ச் தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link