Last Updated:
US Election 2024 Result | அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். அந்நாட்டின் நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
Also Read: US Election 2024 Result Live : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமானோர் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி சுமார் நான்கரை கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் டொனல்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். காலை 9.30 நிலவரப்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 207 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 179 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றி பெற 270 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.
November 06, 2024 9:39 AM IST
US Election 2024 Result | அமெரிக்காவை ஆளப்போவது யார்..? வாக்கு எண்ணிக்கையில் டொனால்டு டிரம்ப் முன்னிலை!