Last Updated:
Vaadivaasal | இதனால் படப்பிடிப்பு கைவிடப்பட்டது என எல்லாம் தகவல் வெளியாகின. இந்த நிலையில்தான் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் வாடிவாசல் படம் விரைவில் தொடங்கும் என்று உறுதியாக கூறினர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கான அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவில்லை. இருந்தாலும் படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்கான சில காட்சிகளை சோதனை அடிப்படையில் சென்னைக்கு அருகே படமாக்கினர்.
அதற்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டு இங்கு ஜல்லிக்கட்டு நடப்பது போலவும், அதில் பங்கேற்கும் காளைகளை சூர்யா அடக்குவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்குப் பிறகு படப்பிடிப்பு எதுவும் தொடங்கவில்லை.
இதையும் வாசிக்க: தல பொங்கல் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்… சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்
இதனால் படப்பிடிப்பு கைவிடப்பட்டது என எல்லாம் தகவல் வெளியாகின. இந்த நிலையில்தான் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் வாடிவாசல் படம் விரைவில் தொடங்கும் என்று உறுதியாக கூறினர்.
தற்போது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருக்கிறார். அதிலும் சூர்யா – வெற்றிமாறன் – தாணு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
January 15, 2025 10:08 AM IST