Last Updated:

Vetrimaaran | வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

News18

‘விடுதலை 2’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தனுஷை வைத்து புதிய படம் இயக்குகிறார். இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ படங்களை இயக்கி முடித்த வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் வாசிக்க: Game Changer | ‘இந்தியன் 2’ படத்தின் வசூலை முறியடித்ததா ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’?

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. விடுதலை படத்தை தயாரித்த ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கின்றனர். அதில் ஜூனியர் என்.டி.ஆர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.



Source link