Last Updated:

அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை ஆவலுடன் காத்திருந்தனர். அதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் திரைப்படம் வெளியாவதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்ததுள்ளது.

News18

பொங்கல் வெளியீட்டிலிருந்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் விலகிச் சென்று இருக்கும் நிலையில், ஏராளமான சிறிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடுவதாக இருந்தது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை ஆவலுடன் காத்திருந்தனர். அதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் திரைப்படம் வெளியாவதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்ததுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அஜித் திரைப்படம் வெளியாவதால் வேறு திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை. ஆனால் தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியீட்டிலிருந்து தள்ளிச் சென்று இருப்பதால், பொங்கல் பண்டிகைக்கு தங்களுடைய திரைப்படங்களை வெளியிட பல தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். பொங்கல் வெளியீட்டு பட்டியலில் தற்போது சசிகுமார் நடித்திருக்கும் ‘ஃப்ரீடம்’ (Freedom), கிஷன் தாஸ் நடித்துள்ள ‘தருணம்’, சிபி சத்யராஜ் நடித்திருக்கும் ‘10 ஹவர்ஸ்’ (10 Hours), பாலா இயக்கியிருக்கும் ‘வணங்கான்’ ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என அறிவித்திருக்கின்றன.

இந்தப் படங்கள் தவிர, ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் ‘நேசிப்பாயா’ உள்ளிட்ட சில திரைப்படங்களையும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையில் இருந்து விடாமுயற்சி விலகி இருக்கும் நிலையில் ஏராளமான சின்ன பட்ஜெட் திரைப்படங்களும், மீடியம் பட்ஜெட் திரைப்படங்களும் வெளியிட்டுக்கு தயாராகி வருகின்றன. அதேசமயம் தற்போது வெளியீட்டில் இருந்து தள்ளிச்சென்று இருக்கும் விடாமுயற்சி குடியரசு தினத்திற்கு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.



Source link