Last Updated:
Viduthalai 2 | ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடுதலை 2’ படத்தின் ஓடிடி எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘விடுதலை’. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். படத்தை எல்ரெட் குமார் தயாரித்தார். கடைநிலை காவலர் ஒருவரின் பார்வையிலிருந்து விரியும் இந்தப் படம் அதிகார அத்துமீறலை அழுத்தமாக பேசியது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கினார். விஜய் சேதுபதியின் கதையாக விரியும் இந்தப் பாகத்தில் மஞ்சு வாரியர் நடித்தார். படம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.40 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ‘விடுதலை 2’ படம் வரும் ஜனவரி 17-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை ஓடிடியில் பார்க்க வைக்க வெற்றிமாறன் யுக்தி ஒன்றையும் கையாண்டிருக்கிறார். அதன்படி ஒரு மணி நேர கூடுதல் காட்சிகள் ஓடிடியில் இடம்பெறும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அதன்படி படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 53 நிமிடம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
December 31, 2024 9:57 AM IST