Last Updated:

நடிகர் பார்த்திபன், விஜயின் அரசியல் வருகையால் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக கருத்து தெரிவித்தார். அரசியலில் விஜயின் பாதை சரியானது என்றும், அவரை ஆதரிப்பதாகவும் கூறினார்.

News18News18
News18

விஜயின் அரசியல் வருகையால், அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்படும் நிலையில், தனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுவதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த கட்டத்துக்கு வர முடியும். எம்.ஜி.ஆர், கருணாநிதி எல்லோரும் அதைத்தானே செய்தார்கள். அதுதான் விஜய் செய்கிறார்.

நான் ஒரு கட்சி சார்ந்தவன் அல்ல. யார் அரசியலுக்கு வந்தாலும் நான் பாராட்டுவேன். விஜய் அரசியலுக்கு அழைத்தால் நான் செல்ல மாட்டேன். அரசியலில் விஜய் செல்லும் பாதை சரியானது” என்று கூறினார்.

மேலும், விஜயின் அரசியல் வருகையால், அஜித்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்படும் நிலையில், தனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுவதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.



Source link