Last Updated:
Vijay | “இன்று அவர் செய்யும் படத்தை தான் நான் 12 வருடங்களுக்கு முன்பு சொன்னேன். அது ஒரு இன்டர்நேஷனல் படமாக அமைந்திருக்கும். ஆனால், சில, பல காரணங்களால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை” என தெரிவித்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்யிடம் ‘யோகன்’ படத்தின் கதையை கூறிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் ‘யோகன்’. இந்தப் படம் குறித்த செய்திகள் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைகூடவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அண்மையில் பேட்டியளித்துள்ள இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “விஜய்யிடம் ‘யோகன்’ படத்தின் கதையை 2.30 மணி நேரம் விவரித்தேன்.
இதையும் வாசிக்க: அஜித் முகத்தில் இப்படியொரு சிரிப்பை பார்த்திருக்க மாட்டீங்க!! மாதவன் வெளியிட்ட வீடியோ வைரல்
அதை கேட்டு விஜய், ‘இது ஆங்கில படம் போல இருக்கிறது. இங்கே இது சரியாக வருமா என தெரியவில்லை. அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை நடிகையாக தேர்வு செய்துள்ளீர்கள். தமிழ் படம் மாதிரி தெரியவில்லையே’ என்றார். ஆனால், என்னை பொறுத்தவரை இப்படியொரு படம் பண்ண வேண்டும் என நினைத்தேன்.
இன்று அவர் செய்யும் படத்தை தான் நான் 12 வருடங்களுக்கு முன்பு சொன்னேன். அது ஒரு இன்டர்நேஷனல் படமாக அமைந்திருக்கும். ஆனால், சில, பல காரணங்களால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை” என தெரிவித்தார்.
January 13, 2025 6:49 AM IST