Last Updated:

Vijay Sethupathi | துணை நடிகராக இருந்து, நாயகனாகி தற்போது பிக்பாஸ் நடுவராக இருக்கும் விஜய் சேதுபதி பாடலாசிரியர் அவதாரத்தை எடுத்துள்ளார். விரைவில் அவரது எழுத்தில் உருவாகியுள்ள பாடல் வெளியாக உள்ளது.

News18

துணை நடிகராக இருந்து, நாயகனாகி தற்போது பிக்பாஸ் நடுவராக இருக்கும் விஜய் சேதுபதி பாடலாசிரியர் அவதாரத்தை எடுத்துள்ளார். விரைவில் அவரது எழுத்தில் உருவாகியுள்ள பாடல் வெளியாக உள்ளது.

Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத். பவ்யா திரிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’. இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவையாக சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இந்தப் பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என்பது மற்றொரு சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதையும் வாசிக்க: Ajith vs Dhanush | அஜித்துடன் மோதும் தனுஷ்… உறுதி செய்த போஸ்டர் அறிவிப்பு 

“ஏதோ பேசத்தானே.. என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே..” என தொடங்கும் பாடலை எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. டூயட் பாடலான இதை முன்னணி நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து “ஜெயிலர்” தமன்னா பாடலான “காவாலா..” பாடல் புகழ் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். காதலன், காதலியின் ஊடலைச் சொல்லும் இப்பாடல் முழுவதும், சென்னை சப்வே ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் பாபி மாஸ்டர் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். விரைவில் இப்பாடல் வெளியாக உள்ளது.



Source link