Last Updated:

Vikram | விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

News18

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

’தங்கலான்’ படத்தை முடித்த கையுடன் விக்ரமும், ‘சித்தா’ படத்தை தொடர்ந்து எஸ்.யூ.அருண்குமாரும் இணைந்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

இதையும் வாசிக்க: Mysskin | போலி அறிவாளி.. அருவருப்பு பேச்சு.. இளையராஜாவை இப்படிசொல்வதா? – மிஷ்கினை தாக்கிய நடிகர்!

ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னர் ஆக தயாராகும் இந்த படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் திட்டமிட்ட தேதியில் படத்தின் வேலைகளை முடிக்காததால் மார்ச் மாதம் படத்தை வெளியிட முடிவெடுத்தனர். இந்நிலையில் இந்தப் படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.



Source link