Last Updated:

Vishal | நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

News18

நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த ‘மதகஜராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் மேடையில் பேசினார். அப்போது வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார். விஷாலின் கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஷால் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையில் இருந்து மருத்துவ சீட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும், தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில், “விஷால் வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல் வலி மற்றும் சோர்வில் இருக்கிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.



Source link