Last Updated:
பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான விவோ இந்தியாவில் அதன் Vivo T3x 5G மொபைலின் விலையை கணிசமாக குறைத்துள்ளது.
பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான விவோ இந்தியாவில் அதன் Vivo T3x 5G மொபைலின் விலையை கணிசமாக குறைத்துள்ளது.
விவோ டி சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 SoC ப்ராசஸருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைலில் 6.72-இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே உள்ளது மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 6,000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Vivo T3x 5G டிவைஸின் விலையை நிறுவனம் ரூ.1,000 வரை குறைத்துள்ளது, இதை தவிர Flipkart-ல் இந்த மொபைலுக்கு பேங்க் டிஸ்கவுன்ட்ஸ்களையும் பெறலாம்.
இந்தியாவில் Vivo T3x 5G மொபைலின் திருத்தப்பட்ட விலை விவரங்கள்:
Vivo T3x 5G மொபைலின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் முந்தைய விலை ரூ.13,499ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.12,499-ஆக திருத்தப்பட்டு உள்ளது. அதே போல 6GB ரேம்+ 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜின் முந்தைய விலைகள் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,499-ஆகி இருந்த நிலையில் தற்போது இவதின் விலைகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,499-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. கிரிம்சன் ப்லிஸ், செலஸ்டியல் கிரீன் மற்றும் சஃபையர் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
இந்த மொபைலை விவோ இந்தியா இ-ஸ்டோர், ஃபிளிப்கார்ட் மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் வாங்கலாம். ஃபிளிப்கார்ட் மூலம் இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளிலும் ரூ.1,500 தள்ளுபடி பெறலாம். நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் மாதம் ரூ.4,167-ல் இர்ந்து தொடங்குகிறது.
Vivo T3x 5G மொபைலின் அம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14-ல் இயங்கும் இந்த மொபைல் 1,000nits பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ள 6.72-இன்ச் ஃபுல்-HD LCD டிஸ்ப்ளேவை பெற்றிருக்கிறது. இந்த மொபைலில் 4nm-அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் உள்ளது, இது 8GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கி கொள்ளலாம்.
Vivo T3x 5G மொபைலானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MPசென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இதன் முன்பக்கத்தில் 8MP கேமராவை கொண்டுள்ளது. இந்த மொபைல் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க டூயல் ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது.
January 03, 2025 2:11 PM IST