ரஜினிகாந்த் படங்களுக்கு இந்தி மொழியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மயூர் வியாஸ் என்ற வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட். இவரது பயணம் சிவாஜி படத்தில் இருந்துதான் முதன் முதலில் தொடங்கியது. இந்தியில் ரஜினிகாந்தின் டயலாக்குகள் நன்றாக ரீச் ஆகுவதற்கு மயூர் வியாசின் குரலும் ஒரு காரணம் என பாராட்டுகள் குவிக்கின்றன.

இவர் எப்படி ரஜினி படத்தில் இணைந்தார் என்பது குறித்து பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமான அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கக்கூடிய கூலி என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

கூலி படத்தை தொடர்ந்து அவர் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மொழியையும் தாண்டி ரஜினிக்கு மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தி மொழியில் அவரது படங்கள் கணிசமான அளவு வசூலை பெற்று வருகிறது. இந்தியில் உள்ள திரை நட்சத்திரங்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய முன்னணி நட்சத்திரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.

ரஜினியின் இந்தி படங்களுக்கு மயூர் வியாஸ் என்பவர் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இது பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது-

விளம்பரம்

நான் ரஜினிகாந்துக்கு பின்னணி குரல் கொடுப்பதற்கு இயக்குனர் ஷங்கர் தான் காரணம். ரஜினியுடைய சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த போது இந்தி பதிப்புக்கு ரஜினியை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுக்கப்பட்டது.

Also Read:  
17 வருட திருமண வாழ்க்கை முறிந்தது.. தனுஷ், ஜீ.வி வரிசையில் விவாகரத்து அறிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

இருப்பினும் ரஜினிக்கு ஏற்ற வாய்ஸ் கிடைக்கவில்லை. அப்போதுதான் என்னை தேர்வு செய்தார்கள். எனது வாய்ஸை டெஸ்ட் செய்த போது படக்குழுவினருக்கு திருப்தி ஏற்பட்டது. அதன் பின்னர் நான் சிவாஜி படத்தில் ரஜினிகாந்திற்கு குரல் கொடுத்தேன். சிவாஜி படத்துக்கு பின்னர் ரஜினியுடைய 10 படங்களுக்கு நான் வாய்ஸ் ஓவர் செய்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.



Source link