03
இன்ஸ்பெக்டர் ரிஷி: ஹாரர் – க்ரைம் ரசிகர்களுக்கு ஏற்ற வெப்சீரிஸ் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’. பொறுமையாக நகர்வது போல தோன்றினாலும், அடுத்து என்ன என்ற உணர்வை தூண்டக்கூடியது. கண்பார்வையால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ரிஷி வனப்பகுதிக்கு மாற்றப்படுகிறார். அங்கு நிலவும் மர்மமான வழக்கு ஒன்றை விசாரிக்கிறார். அதில் நடக்கும் திருப்பங்களும், திகில் அனுபவங்களும் தான் கதைக்களம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த தொடர் காணக்கிடைக்கிறது. ஜே.எஸ்.நந்தினி இயக்கியுள்ள இந்த தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணன் ரவி, மாலினி ஜீவரத்தினம், குமரவேல், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மொத்தம் 10 எபிசோடுகள். மர்மங்களை நோக்கி நகரவைக்கும் இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடும் இறுதியில் நடக்கும் சம்பவத்துக்கான ஆர்வத்தை தூண்டிக்கொண்டே செல்லும். சில இடங்களில் சோர்வை தரலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் வெளியான கவனிக்க வைக்கும் வெப்சீரிஸ்களில் இதுவும் ஒன்று.