இந்தியாவில் சோனி அதன் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் வரிசையில் புதிய WF-L910 லிங்க்பட்ஸ் ஓப்பனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆடியோ பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோனி, ஹெட்போன்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ஆண்டு, ULT ஹெட்ஃபோன்கள் மற்றும் WH-100XMS இயர்பட்ஸ் உள்ளிட்ட புதிய ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்கள் மற்றும் ஹெட்செட்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் TWS இயர்பட்ஸின் போர்ட்ஃபோலியோவை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி, தற்போது WF-L910 லிங்க்பட்ஸ் ஓபனை(WF-L910 LinkBuds Open) அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான ரிங் வடிவமைப்பு மற்றும் 22 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்ட இந்த சோனி இயர்பட்கள் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் கொண்ட மற்றும் வசதியான TWS இயர்பட்களை தேடும் பயனர்களை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read:
FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டி எவ்வளவு கிடைக்கும்? பிரபல வங்கிகளின் லிஸ்ட்
இந்தியாவில் சோனி WF-L910 விலை
சோனி நிறுவனம் அதன் புதிய WF-L910 லிங்க்பட்ஸ் ஓபனை இந்தியாவில் ரூ.19,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி சென்டர்கள், சோனி அங்கீகாரம் பெற்ற டீலர்கள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இந்த இயர்பட்கள் தற்போது கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது.
சோனி WF-L910 இயர்பட்ஸ்-ன் முக்கிய அம்சங்கள்
சோனி WF-L910 (லிங்க்பட்ஸ் ஓபன்), 11mm ரிங் வடிவத்துடன், நியோடைமியம் மேக்னட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. சோனியின் கூற்றுப்படி, இந்த வடிவமைப்பு ஆடியோவின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக வழங்க உதவுகிறது. இந்த இயர்பட்கள் டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் (DSEE) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. இது ஒருங்கிணைந்த பிராசசர் V2 மூலம் ஆடியோவை சிறப்பாக வழங்குகிறது. மேலும் இது, இசை மற்றும் அழைப்புகளின் தரத்தை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு காது அளவுகளுக்கு வசதியாக இருப்பதற்காக மேம்படுத்தப்பட்ட இந்த லிங்க்பட்ஸ் ஓபன், ஏர் பிட்டிங் ஆதரவுடன் வருகிறது. இயர்பட்கள் தனித்துவமான ரிங் வடிவமைப்பை பெற்றுள்ளன. சோனியின் கூற்றுப்படி, உரையாடல்கள் அல்லது அருகிலுள்ள முக்கிய தகவல்கள் போன்ற வெளிப்புற ஒலிகளைப் பற்றி அறிந்திருக்க பயனர்களை இது அனுமதிக்கிறது.பல்வேறு சூழல்களில் தெளிவான, இரைச்சல் இல்லாத அழைப்புகளை வழங்க, மேம்பட்ட ஆடியோ சிக்னல் பிராசசிங் மற்றும் வாய்ஸ் பிக்அப் தொழில்நுட்பத்தையும் இதில் இணைத்துள்ளனர்.
WF-L910 இன் கூடுதல் அம்சங்களில் அடாப்டிவ் வால்யூம் கண்ட்ரோல், வாய்ஸ் கன்ட்ரோல், வைட் ஏரியா டேப், ஆட்டோ ப்ளே, ஆட்டோ ஸ்விட்ச், க்விக் ஆக்சஸ் மற்றும் மல்டிபாயிண்ட் கனெக்ஷன் ஆகியவை அடங்கும். இதன் பேட்டரி ஆயுள் 22 மணிநேரம் வரை மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விரைவான சார்ஜிங் அம்சம் 3 நிமிடம் சார்ஜ் செய்த பிறகு 60 நிமிடங்கள் வரை பிளேபேக்கை வழங்குகிறது. இயர்பட்கள், சவுண்ட் கனெக்ட் ஆப்ஸுடன் இணக்கமாக உள்ளன. இதனால் ஈக்வலைசர் போன்ற அமைப்புகளை பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அனுமதிக்கிறது.
.