மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்குச் சொந்தமான முன்னணி மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

டபிள்யூஏபீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) தகவல்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா சோதனையில் இருக்கும் இந்த அம்சம், விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எளிமையாக சொல்ல வேண்டுமானால், ரிவர்ஸ் இமேஜ் சர்ச் என்பது, வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தை பெற்றால், அதனை சரிபார்க்க நேரடியாக கூகுளில் அந்த புகைப்படத்தை பதிவேற்றி அதன் உண்மைத்தன்மையை சோதிக்க உதவும் ஒரு முக்கிய அம்சமாகும்.

இதன் செயல்பாடு, பயனர்கள் ஒரு புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி தேட அனுமதிக்கும், பின்னர் கூகுள் சர்ச் இஞ்சின் அந்த குறிப்பிட்ட புகைப்படம் பதிவேற்றப்பட்ட இடங்கள் அல்லது அதேபோன்ற பிற புகைப்படங்களைக் கண்டறியும். இதன்மூலம் போலியான அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதை தடுக்க முடியும் என்று வாட்ஸ்அப் நினைக்கிறது.

இருப்பினும், தற்போது இந்த அம்சம் பயன்பாட்டில் இல்லை, எனவே பீட்டா சோதனையாளர்களால் கூட இதை பயன்படுத்திப் பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி, மெட்டா அதன் ஐஓஎஸ் பயன்பாட்டிற்காக இதேபோன்ற அம்சத்தை உருவாக்குகிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

படி 1: முதலில், வாட்ஸ்அப் சேட் பக்கத்தில் நீங்கள் தேட விரும்பும் படத்தைத் தொட வேண்டும்.

படி 2: பின்னர், மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டு அதில் ஆப்ஷன்ஸ் மெனுவை தேர்வு செய்ய வேண்டும்.

படி 3: அடுத்ததாக, ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து, ரிவர்ஸ் இமேஜ் சர்ச் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

படி 4: இதையடுத்து, கூகுள் தானாகவே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை செயல்படுத்தத் தொடங்கும்.

படி 5: ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சானது, நமக்கு கிடைத்த படம் ஆன்லைனில் வேறு எங்கேயாவது இருக்கிறதா அல்லது ஏதேனும் தவறான தகவல்களுடன் தொடர்புடையதா என்று கூகுள் அதன் டேட்டாபேஸில் தேடும்.

பிரபலமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் அதன் மில்லியன் கணக்கான பயனர்களிடையே போலியான அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதற்கான ஒரு முதன்மை தளமாக இருந்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக, சோதனை செய்து வரும் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குவதன் மூலம், அதன் பயனர்கள் டிஜிட்டல் உலகத்தை மிகவும் திறமையாக கையாள முடியும் மற்றும் போலியான அல்லது தவறான தகவல்களை கண்டறிந்து தவறான தகவல் பரவுவதைத் தடுக்க இது உதவுகிறது.



Source link