ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதிபெற இந்திய அணி முனைப்பு காட்டிவருகிறது. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ள இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி மூலம் மேலும் முன்னேறியுள்ளது. இம்முறையும் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அடுத்த சில மாதங்களில் இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து எதிராக உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டிலும் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடர்களின் முடிவே, இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்தும்.

விளம்பரம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இன்னும் 8 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இதில், நியூசிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரும், இதையடுத்து ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.

வருகிற 16ம் தேதி நியூசிலாந்து டெஸ்ட் தொடர் பெங்களூரு மைதானத்தில் தொடங்குகிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதுவரை, இந்தியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி, 2ல் தோல்வி, ஒரு டிரா உடன் 98 புள்ளிகள், 74.24 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

விளம்பரம்

இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 12 டெஸ்டில் 8 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என 90 புள்ளிகள் எடுத்துள்ளது. இலங்கை அணி 9 ஆட்டங்களில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற, எஞ்சியிருக்கும் 8 டெஸ்ட்களில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றால் போதும். நியூசிலாந்தை 3-0 என வீழ்த்தி தொடரை இந்தியா கைப்பற்றினால், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிடும். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 1 போட்டியில் வெற்றி பெற்றால்கூட, அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழையும்.

விளம்பரம்

Also Read | போதை பழக்கத்தால் கெரியரை தொலைத்த கிரிக்கெட் வீரர்கள்… பணம், நற்பெயரை இழந்த துயரம்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றாலோ அல்லது 1-0 என்ற கணக்கில் வென்று, பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றாலோ, இலங்கை – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் முடிவுகளுக்காக இந்திய அணி காத்திருக்க வேண்டிவரும்.

ஒருவேளை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா இழக்கும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Source link