போட்டியின் இறுதி நாளான இன்று, 92 ஓவர்களில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய இந்திய அணி, 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 208 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் அவருக்கு போதுமான ஆதரவு அளிக்கவில்லை.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா (9 ரன்கள், 40 பந்துகள்), கே.எல். ராகுல் (0 ரன்கள், 5 பந்துகள்) மற்றும் விராட் கோலி (5 ரன்கள், 29 பந்துகள்) ஆகியோர் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். முதல் செஷனிலேயே இவர்கள் மூவரும் ஆட்டமிழந்ததால், இந்திய அணி டிரா செய்யவே தடுமாறியது. போட்டி டிரா ஆக வாய்ப்புள்ளது என்ற எண்ணமும், ரிஷப் பண்ட் அவுட் ஆகும்போது பறிபோனது.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா…

இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?:

50 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் ஏற்பட்ட இந்த தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புள்ளிப்பட்டியலில் 52.78 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஜனவரி 3, 2025 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். இதையடுத்து இலங்கை அணியுடன் மோதும் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால், இந்தியா 55.26% புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 51.75% புள்ளிகளுடனும், இலங்கை 53.85% புள்ளிகளுடனும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிபை முடிக்கும்.

ஆனால் ஆஸ்திரேலியாவுடனான 5-ஆவது டெஸ்டில் இந்தியா தோற்றாலோ அல்லது போட்டி டிராவில் முடிந்தாலோ, ரோஹித் சர்மா தலைமையிலான அணி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link