Last Updated:
WTC final qualification scenario | இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் மீதம் உள்ளது. அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு இலங்கையுடனும், தென்னாபிரிகா அணிக்கு பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் தொடர் மீதம் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த இறுதிப்போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பதே அனைத்து ரசிகர்களுக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இந்த போட்டி டிராவில் முடிவடைந்ததால், உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 55.88 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 58.89 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 63.33 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: “நாங்கள் தான் கடைசி ‘OG’-களாக இருப்போம்…” – ஆஸ்வின் ஓய்வு அறிவிப்பை வருத்தத்துடன் கேட்ட ரோகித் சர்மா
தற்போது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் மீதம் உள்ளது. அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு இலங்கையுடனும், தென்னாப்பிரிக்கா அணிக்கு பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் தொடர் மீதம் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி எளிதாக உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதற்கடுத்து ஆஸ்திரேலியா அணி இலங்கை அணியுடன் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அந்த அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது.
இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் டிரா செய்தால், ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில், இலங்கை அணி ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும்.
இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா அணியை இலங்கை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடவிருக்கும் 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா அணி அந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தால், இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுடன் ஒரு வெற்றியே போதுமானது. மேலும் மற்றொரு இறுதிப்போட்டியாளரை, ஆஸ்திரேலியா – இலங்கை தொடர் முடிவிலேயே தேர்ந்தெடுக்க முடியும்.
December 18, 2024 1:10 PM IST